/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரூ.5.20 கோடியில் 'பசுமை பள்ளி' திட்டம் முதல் கட்டமாக 26 பள்ளிகளுக்கு ஒப்புதல்
/
ரூ.5.20 கோடியில் 'பசுமை பள்ளி' திட்டம் முதல் கட்டமாக 26 பள்ளிகளுக்கு ஒப்புதல்
ரூ.5.20 கோடியில் 'பசுமை பள்ளி' திட்டம் முதல் கட்டமாக 26 பள்ளிகளுக்கு ஒப்புதல்
ரூ.5.20 கோடியில் 'பசுமை பள்ளி' திட்டம் முதல் கட்டமாக 26 பள்ளிகளுக்கு ஒப்புதல்
ADDED : செப் 04, 2024 08:27 PM
கோவை:தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளின் வளாகத்தை, சிறப்பான முறையில் பராமரிக்கும் வகையில், 'பசுமை பள்ளி திட்டம்' செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின்படி, மழைநீர் சேகரிப்பு, காய்கறி தோட்டம் அமைத்தல், நீர் பயன்பாட்டை குறைத்தல், பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும்.
2023 - 24ம் கல்வியாண்டில் தலா, ரூ.20 லட்சம் வீதம், 50 பள்ளிகளில், ரூ.10 கோடி மதிப்பீட்டில் 'பசுமை பள்ளி திட்டம்' செயல்படுத்தப்படும் என, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை துறை அறிவித்திருந்தது. தொடர்ந்து, 2024 - 25ம் கல்வியாண்டில், தலா ரூ.20 லட்சம் வீதம், ரூ.20 கோடி மதிப்பீட்டில், 100 பள்ளிகளில் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும் என, சட்டசபையில் அரசு அறிவித்தது.
அவ்வகையில், முதல்கட்டமாக, 26 பள்ளிகளில் இத்திட்டத்தை செயல்படுத்த, தற்போது அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கென, பள்ளிக்கு தலா, ரூ.20 லட்சம் வீதம், ரூ.5.20 கோடியை, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் நிதியிலிருந்து, பள்ளி கல்வித்துறைக்கு ஒதுக்கீடு செய்து, அரசு முதன்மை செயலர் செந்தில்குமார் அரசாணை பிறப்பித்துள்ளார்.
இதில், கோவை மாவட்டத்தில், ராமநாதபுரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, ராமலிங்கம் காலனி மாநகராட்சி உயர்நிலை பள்ளி என, இரு பள்ளிகள் இடம்பெற்றுள்ளன.
மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான இத்திட்டத்தை, இதர பள்ளிகளிலும் விரிவுபடுத்தும் நடவடிக்கையை, அரசு மேற்கொண்டு வருவதாக பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.