/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவை இன்ஜினியரிடம் ரூ.8 லட்சம் கடன் மோசடி
/
கோவை இன்ஜினியரிடம் ரூ.8 லட்சம் கடன் மோசடி
ADDED : ஜூலை 11, 2024 01:49 AM
கோவை:கோவை மாவட்டம், நேரு நகரை சேர்ந்தவர் விஷால், 25, தனியார் நிறுவன இன்ஜினியர். கடந்த, 9ம் தேதி இவருக்கு போன் அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், 'மும்பையில் இருந்து ஈரானுக்கு அனுப்பிய பார்சலில், உங்கள் போன் எண் உள்ளது. இந்த பார்சல் சுங்கத்துறையால் பறிமுதல் செய்து வைக்கப்பட்டுள்ளது. அதில் சர்ச்சைக்குரிய பொருட்கள் உள்ளன. விசாரித்து வருகிறோம்' என, தெரிவித்தார்.
அதிர்ச்சி அடைந்த விஷாலை மறுநாள் தொடர்பு கொண்ட இன்னொரு நபர், 'நீங்கள் அனுப்பிய பார்சலில் காலாவதியான நான்கு ஈரானியர்களின் பாஸ்போர்ட், மூன்று 'டெபிட் கார்டு'கள், 750 கிராம் போதை பொருட்கள் இருக்கின்றன' என தெரிவித்தார்.
இதையடுத்து, அந்த நபர் அறிவுறுத்தலின்படி, 'ஸ்கைப்' செயலி வாயிலாக, விஷால் தொடர்புகொண்டபோது, ஆதார் எண், வங்கிக்கணக்கு விபரங்களை பெற்றனர். அதை வைத்து வங்கியில், 8 லட்சம் ரூபாய் தனிநபர் கடனை மோசடி நபர்கள் வாங்கினர். இதை அறிந்த விஷால், கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். விசாரணை நடந்து வருகிறது.