/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆர்.டி.ஓ., ஆபீஸ் சர்வர் பழுது:பணிகள் தொய்வு
/
ஆர்.டி.ஓ., ஆபீஸ் சர்வர் பழுது:பணிகள் தொய்வு
ADDED : மே 18, 2024 02:35 AM

கோவை;கோவையிலுள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் சர்வர் பிரச்னை காரணமாக, லைசென்ஸ் எடுத்தல் உள்ளிட்ட பணிகள் பாதிப்புக்குள்ளாயின.
கோவை வடக்கு, தெற்கு, மத்தியம், மேற்கு ஆகிய வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் சர்வர் தற்காலிகமாக செயல்படாததால் பணிகள் நேற்று முன்தினம் முடங்கின.
டிரைவிங் லைசென்ஸ், லைசென்ஸ் புதுப்பித்தல், வாகனத்திற்கான புதிய பதிவு எண் பெறுதல், தகுதிச்சான்று பெறுதல் பழகுனர் உரிமம் பெறுதல் ஆகிய பணிகள், கம்ப்யூட்டர் வாயிலாக பெறப்படுகிறது.இப்பணிகள் அனைத்தும் சாரதி போர்ட்டல் என்ற சர்வர் வாயிலாக இயங்கி வருகிறது.
இந்நிலையில் இந்த சர்வர் தொழில்நுட்ப பராமரிப்பு பணிக்காக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இன்று (18ம் தேதி) காலை 10:00 மணி வரை, சர்வர் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இதனால் கோவையிலுள்ள ஆர்.டி.ஓ., அலுவலகங்களில் பணிகள் முடங்கின.

