/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ருவாண்டா இன்ஜினீயர்களுக்கு கோவை பம்ப் நிறுவனத்தில் பயிற்சி
/
ருவாண்டா இன்ஜினீயர்களுக்கு கோவை பம்ப் நிறுவனத்தில் பயிற்சி
ருவாண்டா இன்ஜினீயர்களுக்கு கோவை பம்ப் நிறுவனத்தில் பயிற்சி
ருவாண்டா இன்ஜினீயர்களுக்கு கோவை பம்ப் நிறுவனத்தில் பயிற்சி
ADDED : மார் 06, 2025 10:17 PM
கோவை; மத்திய அரசு சார்பில், ருவாண்டா நீர்ப்பாசன இன்ஜினீயர்களுக்கு, கோவை வேளாண் பல்கலை வாயிலாக பயிற்சி அளிக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, ருவாண்டா இன்ஜினீயர்களுக்கு, வயல்வெளிகளின் தன்மைக்கு ஏற்ப, பம்ப்களை தேர்வு செய்யும் முறை, பம்ப்களின் திறனை மதிப்பிடுதல், அவற்றில் ஏற்படும் குறைகளைக் கண்டறிதல் உள்ளிட்டவை குறித்து செயல்முறை பயிற்சி அளிக்கப்பட்டது.
துடியலுாரில் உள்ள அக்வாசப் தனியார் பம்ப் உற்பத்தி நிறுவனத்தில் இந்த பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும், நீர்ப்பாசனத்தைத் திட்டமிடும்போது, எவ்வாறு சூரிய ஒளியைப் பயன்படுத்தி இயங்கும் பம்ப்களைப் பயன்படுத்தி, ஆற்றலைச் சேமிப்பது, ரோபோக்களைப் பயன்படுத்தி எவ்வாறு பம்ப்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன, ஐ.நா., பரிந்துரைகளின் அடிப்படையில் ஆற்றல் கணக்கீடு முறைகளை கணக்கிடுவது உள்ளிட்டவை குறித்தும் அறிந்து கொண்டனர்.
அக்வாசப் இன்ஜினீயரிங் நிறுவனத்தின் போக்குவரத்து மேலாளர் சுரேஷ்குமார், வேளாண் பல்கலையின் நீர் மற்றும் புவிசார் மைய இயக்குநர் பழனி வேலன், பேராசிரியர்கள் ரவிக்குமார், செல்வ குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.