sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ஒரு ஆண்டில் 20 ஆயிரம் டன் உருளைக்கிழங்கு விற்பனை

/

ஒரு ஆண்டில் 20 ஆயிரம் டன் உருளைக்கிழங்கு விற்பனை

ஒரு ஆண்டில் 20 ஆயிரம் டன் உருளைக்கிழங்கு விற்பனை

ஒரு ஆண்டில் 20 ஆயிரம் டன் உருளைக்கிழங்கு விற்பனை


ADDED : ஜூலை 31, 2024 02:15 AM

Google News

ADDED : ஜூலை 31, 2024 02:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம்;மேட்டுப்பாளையத்தில் உள்ள நீலகிரி கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில், கடந்த 2023--2024ம் நிதியாண்டில் 20 ஆயிரம் டன் ஊட்டி உருளைக்கிழங்கு இடைத்தரகர்கள் இன்றி ரூ.54 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த நிதியாண்டை காட்டிலும் வியாபாரம் அதிகரித்துள்ளது.

மேட்டுப்பாளையம் நெல்லித்துறை சாலையில், நீலகிரி கூட்டுறவு விற்பனைச் சங்கம் செயல்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் உருளைக்கிழங்குகள் இச்சங்கத்தின் விற்பனை கூடம் வாயிலாக 1935ம்ஆண்டு முதல் தினசரி ஏலம் விடப்பட்டு, விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

நீலகிரி மாவட்டம் கேத்தி, குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து, உருளைக்கிழங்கு சீசன் நேரத்தில் தினமும் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் இங்கு வந்து உருளைக்கிழங்குகளை இடைதரகர்கள் இன்றி விற்பனை செய்து வருகின்றனர். சீசன் இல்லாத நேரங்களிலும் தினமும் 20 முதல் 40 விவசாயிகள் இங்கு வந்து விற்பனை செய்கின்றனர்.

விவசாயிகள் கொண்டு வரும் உருளைக்கிழங்குகள் தரம் பிரிக்கப்பட்டு, ஏலம் விடப்படுகின்றன. வியாபாரிகள் ஏலத்தில் எடுத்து, தூத்துக்குடிக்கு துறைமுகம் வழியாக மாலத்தீவு, இலங்கைக்கு ஏற்றுமதி செய்கின்றனர். கேரளாவுக்கும் அனுப்புகின்றனர்.

இடைதரகர்கள் இன்றி இங்கு உருளைக்கிழங்குகள் விற்பனை செய்யப்படுவதால், விவசாயிகள் வியாபாரிகளுக்கு கமிஷன் கொடுக்க தேவையில்லை. மேலும், விவசாயிகள் இங்கு விற்பனை செய்வதற்கு முன்பாகவே, தாங்கள் கொண்டு வந்திருக்கும் உருளைக்கிழங்குகளுக்கு கடன் தொகை பெற்று கொள்ளலாம். இதுதவிர விவசாயிகள் உருளைக்கிழங்குகளை 24 மணி நேரமும் இங்கு கொண்டு வரலாம். அவர்கள் இரவு நேரங்களில் தங்கி கொள்ள ரூம் வசதிகளும் உள்ளன.

இதனால் நீலகிரி மாவட்ட விவசாயிகள் வெளி மார்க்கெட்டுகளில் விற்பனை செய்வதை விட இங்கு விற்பனை செய்யவே அதிகம் விரும்புகிறார்கள்.

இதன் காரணமாக இச்சங்கத்தில் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இச்சங்கத்தின் மேட்டுப்பாளையம் உரப்பிரிவில், உரங்களும் விற்பனை செய்யப்படுகின்றன.

இதுகுறித்து நீலகிரி கூட்டுறவு விற்பனைச் சங்க உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

கடந்த 2022--23ம் நிதியாண்டில் சுமார் 13 ஆயிரத்து 89 டன் உருளைக்கிழங்கு, ரூ.32 கோடியே 14 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

2023--2024ம் நிதியாண்டில் 20 ஆயிரத்து 677 டன் உருளைக்கிழங்கு, ரூ.54 கோடியே 20 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

ஊட்டி கிழங்குகள் மட்டும் தான் விற்பனை செய்யப்படுகிறது. தற்போது நீலகிரி மாவட்ட விவசாயிகள் மேலும் பயன் பெறும் வகையில், வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் ஊட்டி பூண்டுகள் நம் கூடத்தில் விற்பனை செய்யப்பட உள்ளன. இதனால் பூண்டு பயிரிட்டுள்ள விவசாயிகள் இடைதரகரின்றி இங்கு விற்பனை செய்ய முடியும்.

நீலகிரி கூட்டுறவு சங்கத்தில், நீலகிரி விவசாயிகளுக்கு தேவையான உரங்களில் 60 சதவீதம் இங்கு தான் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.

அதன் படி, 2022--23ம் நீதியாண்டில் 12 ஆயிரத்து 776 மெட்ரிக் டன் உரங்கள், ரூ.30 கோடியே 16 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

ஊட்டி கிழங்கு ரூ.4,600க்கு விற்பனை

நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால், நேற்று கூட்டுறவு சங்கத்திற்கு உருளைக்கிழங்கு வரத்து மிகவும் குறைந்திருந்தது. அதன் படி 45 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை ஊட்டி உருளைக்கிழங்கு ரூ.4,600 வரை உச்சத்திற்கு சென்று விற்பனை ஆனது. 225 மூட்டைகள் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ஊட்டி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.-








      Dinamalar
      Follow us