/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மன்னீஸ்வரர் கோவிலில் நடந்தது சமபந்தி விருந்து
/
மன்னீஸ்வரர் கோவிலில் நடந்தது சமபந்தி விருந்து
ADDED : ஆக 17, 2024 12:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்னுார்;அன்னுார் மன்னீஸ்வரர் கோவிலில் சுதந்திர தினத்தை முன்னிட்டு, சமபந்தி விருந்துநடந்தது.
இந்து சமய அறநிலையத்துறை சார்பில், கோவில்களில் சுதந்திர தினத்தை முன்னிட்டு, சமபந்தி விருந்து நடத்த அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆயிரம் ஆண்டுகள் பழமையான, அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில் வடை, பாயசத்துடன் 300 பேருக்கு, அறுசுவை உணவு வழங்கப்பட்டது.
சமபந்தி விருந்தை, அறங்காவலர் குழு தலைவர் நடராஜன் துவக்கி வைத்தார். கோவில் செயல் அலுவலர் சிவசங்கரி, மாவட்ட கவுன்சிலர் ஆனந்தன் மற்றும் அறங்காவலர்கள் பங்கேற்றனர்.

