ADDED : பிப் 15, 2025 07:15 AM

கோவை; ஒண்டிப்புதுாரில் அமைந்துள்ள சமஸ்காரா அகாடமி பள்ளியில் 'வளர்ச்சி' என்ற தலைப்பில், ஆண்டு விழா கொண்டாட்டம் நடந்தது. விழாவிற்கு பள்ளியின் நிறுவனர் துரைராஜ், தாளாளர் பிருந்தா தலைமை வகித்தனர்.
ஒரு ரூபாய்க்கு இட்லி விற்று, மக்கள் மனங்களில் இடம் பிடித்த கமலாத்தாள் பாட்டி, தாய்மை அறக்கட்டளை நிறுவனர் சதீஷ், தெருநாய்களுக்கு அடைக்கலம் கொடுத்து பாதுகாத்து வரும் 'பா சம்' (paw some) அமைப்பின் அறங்காவலர் மேரி சாண்டே, புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முடியை தானமாக பெற்றுக் கொடுத்து, உதவி செய்து வரும் சேவையாளர் பிரேம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.
உயிர்களின் பரிணாம வளர்ச்சி குறித்து, பலநுாறு ஆண்டுகளுக்கு முன்பே கூறிய தொல்காப்பியத்தில், ஓஒரறிவு முதல் ஆறறிவு வகை வகைப்படுத்தப்பட்ட முறைகள் குறித்து ஆடல், பாடல் கலை நிகழ்வுகள் மூலம் மாணவர்கள் உணர்த்தினர். முதல்வர் லிவிலின் சேவியர், துணை முதல்வர் உமா, ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் பங்கேற்றனர்.

