ADDED : மே 20, 2026 09:12 PM
அ நிறம் | அளவு
கோவை:
மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரி கணேசன் தலைமையில் குழு, பீளமேடு, தண்ணீர் பந்தல் சாலை, கொடிசியா பகுதிகளில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அவ்வழியாக வந்த லாரியை தணிக்கை செய்த போது சட்டவிரோதமாக மணல் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அரசுக்கு இழப்பு ஏற்படுத்தும் வகையில், கனிம வளங்கள் கடத்த பயன்படுத்திய லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பீளமேடு போலீசில் புகார் பதிவு செய்யப்பட்டது. போலீசார் டிரைவரை கைது செய்து, லாரி உரிமையாளர், கடத்தலில் தொடர்புடைய மற்றவர்கள் குறித்து விசாரிக்கின்றனர்.
