/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சங்கடஹர சதுர்த்தி விழா: கோவில்களில் வழிபாடு
/
சங்கடஹர சதுர்த்தி விழா: கோவில்களில் வழிபாடு
ADDED : மார் 28, 2024 11:16 PM

- நிருபர் குழு -
பொள்ளாச்சி மற்றும் உடுமலை சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
பொள்ளாச்சி மகாலிங்கபுரம் சக்தி விநாயகர் கோவிலில் சங்கடஹரசதுர்த்தி முன்னிட்டு, கணபதி ேஹாமம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. விநாயகப்பெருமானுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடந்தது. தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் விநாயகப்பெருமான் அருள்பாலித்தார்.
திப்பம்பட்டி சிவசக்தி கோவில், சூளேஸ்வரன்பட்டி அழகாபுரி வீதி விஜயகணபதி கோவில் மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன.
* உடுமலை அருகே சின்னபொம்மன்சாளை கிராமத்தில் செல்வவிநாயகர் கோவில், சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில், சுற்றுப்பகுதி மக்கள் திரளாக பங்கேற்றனர்.
உடுமலை ஜி.டி.வி., லே----அவுட் செல்வவிநாயகர் கோவிலில், சிறப்பு பூஜைகள், ஆராதனை நடந்தது. இதில் விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

