/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து துாய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
/
பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து துாய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து துாய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து துாய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஏப் 28, 2024 02:05 AM
தொண்டாமுத்துார்:மத்திபாளையத்தில், தென்கரை பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து தூய்மை பணியாளர்கள், பேரூராட்சி அலுவலகத்தின் முன்பு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தென்கரை பேரூராட்சியில், சுமார் 20க்கும் மேற்பட்டோர் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளர்களாக பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், தென்கரை பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து, தூய்மை பணியாளர்கள் நேற்று மத்திபாளையத்தில் உள்ள தென்கரை பேரூராட்சி அலுவலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
துாய்மை பணியாளர்கள் கூறுகையில், 'எங்களுக்கு கையுறை, காலணிகள், முககவசம் போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குவதில்லை. தினசரி கூலியாக, 529 ரூபாய் வழங்கப்பட்டு வந்ததை, 553 ரூபாயாக அரசு உயர்த்தியுள்ளது. கடந்த, ஓராண்டாக அரியர் தொகையை வழங்கவில்லை. இதுகுறித்து கேட்டால், பேரூராட்சி செயல் அலுவலர் முறையாக பதில் அளிப்பதில்லை' என்றனர்.
சுமார், 1 மணி நேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பின், வேலைநிறுத்தத்திலும் ஈடுபடுவதாக அனைவரும், பணிக்கு செல்லாமல் புறப்பட்டு சென்றனர்.
தென்கரை பேரூராட்சி செயல் அலுவலர் பழனியப்பனிடம் கேட்டபோது, ''கலெக்டர் உத்தரவிட்டால் அரியர் தொகை வழங்கப்படும்,'' என்றார்.

