/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சங்கரா கல்லுாரி மாணவர்கள் விழிப்புணர்வு
/
சங்கரா கல்லுாரி மாணவர்கள் விழிப்புணர்வு
UPDATED : மார் 22, 2024 12:24 PM
ADDED : மார் 22, 2024 12:24 AM

கோவை:சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லுாரியின் எம்.பி.ஏ., மாணவர்கள், வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் நேற்று பேரணியாக சென்றனர்.
கல்லுாரி சார்பில், வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், ஜனநாயக செயல்பாட்டில் அதிக பங்கேற்பை ஊக்குவிக்கவும், கல்லுாரி மாணவர்கள் சரவணம்பட்டி சந்திப்பில் 2 கி.மீ., தொலைவு, விழிப்புணர்வு பேரணி ஏற்பாடு செய்யப்பட்டது.
கல்லுாரியின் இணைச் செயலாளர் கல்யாணராமன் பேரணியை துவக்கி வைத்தார். சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லுாரி முதல்வர் ராதிகா, மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

