/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சுகாதார நிலைய வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா
/
சுகாதார நிலைய வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா
ADDED : ஏப் 26, 2024 11:50 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆனைமலை:பெரியபோது அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.
ஆனைமலை அருகே, பெரியபோது அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில், ஆனைமலை ஆலம் விழுதுகள் அமைப்பு சார்பில் வழங்கப்பட்ட, பாதாம், பூவரசு, செண்பகம் உள்ளிட்ட, 20 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.
மருத்துவ அலுவலர் கிருத்திகா, ஆயுர்வேத மருத்துவர் சிவதாஸ், வட்டார மருத்துவம் சாரா மேற்பார்வையாளர் செல்லதுரை, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராஜசேகர், சுகாதார ஆய்வாளர்கள், ஆய்வக பரிசோதகர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

