ADDED : ஜூன் 13, 2024 11:14 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு பகுதியில், பசுமையை வலியுறுத்தி ஒன்றிய நிர்வாகத்தினர் சார்பில், ஆற்றங்கரை ஓரம் மரக்கன்றுகள் நடவு செய்ய திட்டமிடப்பட்டது.
இதை தொடர்ந்து கிணத்துக்கடவு, நல்லட்டிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட ஆற்றங்கரை ஓரப்பகுதியில், வேலை உறுதி திட்டம் வாயிலாக, 3.2 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 400 மரக்கன்றுகள், 2 கி.மீ., தூரத்துக்கு நடவு செய்யப்பட உள்ளது.
இதில், தற்போது முதல் கட்டமாக, 40 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. ஆற்றங்கரை ஓரங்களில் ஒரு சில இடங்களில் செடிகள் படர்ந்து உள்ளதால், அதை அகற்றி சுத்தம் செய்து மீதம் உள்ள மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு வருகிறது.

