ADDED : மார் 30, 2024 11:45 PM
அ நிறம் | அளவு
தொண்டாமுத்தூர்;தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் உள்ள பதட்டமான ஓட்டுச்சாவடிகளில், எஸ்.பி., பத்ரிநாராயணன் ஆய்வு செய்தார்.
பொள்ளாச்சி லோக்சபா தொகுதிக்குட்பட்ட, தொண்டாமுத்தூர் சட்டசபை தொகுதியில், 312 ஓட்டுச்சாவடிகள் உள்ளன.
இந்நிலையில், முந்தைய தேர்தல்களின்போது, கட்சியினருக்கு இடையே மோதல், இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்ட ஓட்டுச்சாவடிகளை, பதட்டமான ஓட்டுச்சாவடிகளாக போலீசார் பிரித்துள்ளனர்.
இந்நிலையில், தொண்டாமுத்தூர் வட்டார பகுதிகளில், நாகராஜபுரம் மற்றும் குளத்துப்பாளையத்தில் உள்ள பதட்டமான ஓட்டுச்சாவடி மையங்களில், எஸ்.பி., பத்ரிநாராயணன் நேற்று நேரில் ஆய்வு செய்தார்.
