/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அதிகரிக்கும் 'ஸ்கேம்' அழைப்புகள் மக்களே... உஷாரா இருக்கணும்!
/
அதிகரிக்கும் 'ஸ்கேம்' அழைப்புகள் மக்களே... உஷாரா இருக்கணும்!
அதிகரிக்கும் 'ஸ்கேம்' அழைப்புகள் மக்களே... உஷாரா இருக்கணும்!
அதிகரிக்கும் 'ஸ்கேம்' அழைப்புகள் மக்களே... உஷாரா இருக்கணும்!
ADDED : மார் 04, 2025 10:30 PM
கிணத்துக்கடவு:
கிணத்துக்கடவு மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள மக்களுக்கு அதிகளவு 'ஸ்கேம்' போன் அழைப்புகள் வருகிறது. இதில், சிலருக்கு 'கிரெடிட் கார்டு' மற்றும் 'சிம்' சார்ந்த அழைப்புகள் தொடர்ந்து வருகின்றன.
மேலும், சிலருக்கு 'லோன்' தொடர்பான அழைப்புகள் வருகிறது. இதைத் துண்டித்தாலும், சமூக வலைதளமான 'வாட்ஸ்ஆப்' வாயிலாக தனியார் நிதி நிறுவனங்களின் அடையாளத்தை கொண்டு வாகன லோன் வாங்கி இருப்பதாகவும், அதை முறையாக செலுத்தவில்லை எனவும் குறுஞ்செய்தி அனுப்புகின்றனர்.
வாடிக்கையாளர்களின் மொபைல்போன் எண்ணுக்கு போன் செய்து, நீங்கள் தவணைத் தொகையை முறையாக செலுத்த தவறி உள்ளீர்கள், விரைவாக செலுத்த வேண்டுமென மிரட்டுகின்றனர். இதை ஒரு சிலர் சுதாரித்துக் கொண்டாலும், சிலர் பயந்து பணத்தை செலுத்தி விடுகின்றனர். இது போன்ற செயல்களில் பெரும்பாலும் வட மாநிலத்தவர்கள் ஈடுபடுகின்றனர்.
சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: மக்களின் வாட்ஸ்ஆப்பில், இருசக்கர வாகன லோன் செலுத்தவில்லை என்று கூறி, அதற்கான லோன் எண் அனுப்பி பணத்தை விரைவாக செலுத்தும் படி கூறுகின்றனர். இது போன்று தவறாக செய்தி அனுப்பினால் போலீசில் புகார் அளிப்பேன் என, கூறினால், போன் இணைப்பை துண்டித்து விடுவார்கள்.
அதேபோன்று, வங்கி 'ஏடிஎம்' கார்டு காலாவதியாகிறது. புதுப்பிக்க வேண்டுமானால், எஸ்.எம்.எஸ்., லிங்க்கை கிளிக் செய்ய வேண்டும் என, அனுப்புகின்றனர். அவ்வாறான, எஸ்.எம்.எஸ்.,களை கிளிக் செய்தால், மோசடி நபர்கள், வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை எடுத்து, மோசடி செய்து விடுவார்கள்.
வங்கிகளில் இருந்து எஸ்.எம்.எஸ்., வந்தாலும், நேரடியாக வங்கியை அணுகி தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும். விழிப்புடன் இல்லாவிட்டால், வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை திருடி விடுவார்கள்.
இவ்வாறு, கூறினர்.