/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பொதுத்தேர்வு தர வரிசை குறைகளை களைய திட்டம்
/
பொதுத்தேர்வு தர வரிசை குறைகளை களைய திட்டம்
ADDED : மே 16, 2024 06:22 AM
உடுமலை, : திருப்பூர் மாவட்டத்தில், பிளஸ் 2 மற்றும் பிளஸ் 1ல் மாநில அளவில் முதல் மற்றும் மூன்றாமிடம் பிடித்த போதும், 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், 21வது இடத்துக்கு தள்ளப்பட்ட அதிர்ச்சியில் இருந்து கல்வித்துறை அதிகாரிகள் மீளவில்லை; குறைகளை களைய திட்டங்களை வகுக்க துவங்கியுள்ளனர்.
கடந்த கல்வியாண்டில் நடந்த 10, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகி விட்டன. பிளஸ் 2வில், மாநில அளவில் முதல் ரேங்க், 11ம் வகுப்பு பொது தேர்வில், 3வது ரேங்க் என, திருப்பூர் மாவட்டம் அசத்தியது.
இது, கல்வி அதிகாரிகளுக்கு ஆறுதல் அளித்தாலும், 10ம் வகுப்பு பொது தேர்வில், மாநில அளவில், 21வது இடத்துக்கு தள்ளப்பட்ட அதிர்ச்சியில் இருந்த கல்வி அதிகாரிகள் மீளவில்லை.
கல்வி அதிகாரிகள் கூறியதாவது:
அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகள் தேர்ச்சி விகிதத்தில், கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. மாணவர் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு அதிகரித்து வரும் நிலையில், தேவைக்கேற்ப ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டிய அவசியமும் ஏற்பட்டிருக்கிறது.
பள்ளிகளின் கட்டமைப்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும்; ஏற்கனவே, உள்ள கட்டடங்கள் பராமரிக்கப்பட வேண்டும். மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப, புதிய கட்டடங்கள் கட்டப்பட வேண்டும். இதுபோன்ற விஷயங்களில் இந்தாண்டு கூடுதல் கவனம் செலுத்தப்படும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.