ADDED : ஜூன் 15, 2026 05:11 PM
அ நிறம் | அளவு
வால்பாறை: வால்பாறை அடுத்துள்ள சோலையாறு அணை அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவியருக்கு முன்னாள் மாணவர்கள் சார்பில், பரிசு மற்றும் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.
பள்ளி தலைமை ஆசிரியர் ரேவதி தலைமையில் நடந்த விழாவில், முன்னாள் மாணவர்கள் கமலக்கண்ணன், சந்திரமோகன், சுதா, ஷீபா ஆகியோர் கல்வி உதவித்தொகையை வழங்கினர்.
