/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு விழிப்புணர்வு பெற்றோர்கள் பங்கேற்பு
/
பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு விழிப்புணர்வு பெற்றோர்கள் பங்கேற்பு
பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு விழிப்புணர்வு பெற்றோர்கள் பங்கேற்பு
பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு விழிப்புணர்வு பெற்றோர்கள் பங்கேற்பு
ADDED : ஆக 06, 2024 06:14 AM

பொள்ளாச்சி கல்வி மாவட்டம் மற்றும் உடுமலையில் உள்ள பள்ளிகளில், பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள, பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழுக்கள், இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை மறு சீரமைப்பு செய்ய வேண்டும்.அதன்படி, நடப்பாண்டு பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு செய்ய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதற்கான விழிப்புணர்வு கூட்டம், பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் நடந்தது.தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், பெற்றோருக்கான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. தலைமையாசிரியர் கணேசன் தலைமை வகித்தார். பட்டதாரி ஆசிரியர் தேவி வரவேற்றார்.
இந்தாண்டு பள்ளி மேலாண்மை குழுவுக்கு மொத்தம், 24 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். பெற்றோர் உறுப்பினர்கள் - 15, முன்னாள் மாணவர்கள் - 4, கல்வியாளர் - 1, ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் - 2, ஆசிரியர் - 1, தலைமையாசிரியர் ஒருங்கிணைப்பாளர் - 1 என்ற முறையில் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர் என்ற விபரங்களை தெரிவித்து பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும், இதுவரை பள்ளி மோலண்மை குழு வாயிலாக பள்ளி முன்னேற்றம் அடைந்ததையும், மாணவர் கல்வி முன்னேற்றம் அடைந்ததையும் ஒவ்வொரு நிகழ்வாக தெரிவிக்கப்பட்டது. பட்டதாரி ஆசிரியர் மகாலட்சுமி நன்றி கூறினார்.
*கோடங்கிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடந்த கூட்டத்துக்கு, பள்ளி மேலாண்மை குழு தலைவர் காயத்ரி தலைமை வகித்தார். தலைமையாசிரியர் தினகரன் முன்னிலை வகித்தார்.
பள்ளி மேலாண்மை குழு தலைவர், துணை தலைவர், உறுப்பினர்கள் புதியதாக தேர்ந்தெடுப்பதற்கான மறு கட்டமைப்பு நடைமுறைகள், பெற்றோருக்கான வழிகாட்டு நெறிமுறைகள், மறு கட்டமைப்பு நாள் குறித்து தெரிவிக்கப்பட்டது. ஆசிரியர் சத்தியா நன்றி கூறினார்.
* பொள்ளாச்சி நகராட்சி ராமகிருஷ்ணா நகர் நகராட்சி நடுநிலைப்பள்ளியில், தலைமையாசிரியர் பூங்கொடி தலைமை வகித்தார். நகராட்சி துணை தலைவர் கவுதமன், கவுன்சிலர் வைஷ்ணவி, பள்ளி மேலாண்மை குழு தலைவர் சண்முகபிரியா ஆகியோர் பேசினர். ஆசிரியர் பயிற்றுநர் பாக்கியலட்சுமி, பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு குறித்து விளக்கினார். உதவி தலைமையாசிரியர் ஜெயலட்சுமி நன்றி கூறினார்.
வால்பாறை
வால்பாறையில் உள்ள அரசு பள்ளிகளில், பள்ளி மேலாண்மை குழு அமைக்கப்பட்டுள்ளது. மொத்தம், 20 உறுப்பினர்கள் கொண்ட இக்குழுவாயிலாக, கல்வி உரிமை சட்டம், இடைநிற்றலை தவிர்க்க நடவடிக்கை, பள்ளி வயது குழந்தைகளை பள்ளியில் சேர்த்தல், அனைத்து குழந்தைகளுக்கும் தரமான கல்வி கிடைப்பதை உறுதி செய்தல் போன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
இந்நிலையில், வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழிப்புணர்வு கூட்டத்துக்கு, தலைமை ஆசிரியர் சிவன்ராஜ் தலைமை வகித்தார். பள்ளிக்கல்விக்குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு, பள்ளியின் வளர்ச்சி குறித்து கூட்டத்தில் விவாதித்தனர்.
இதேபோல், வால்பாறையில் உள்ள பல்வேறு பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக்குழு மறு கட்டமைப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. இதில், 6 முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களின் பெற்றோர் கலந்து கொண்டனர்.
உடுமலை
* ராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக்குழு மறு கட்டமைப்புக்கான ஆலோசனைக்கூட்டம் நடந்தது.
பள்ளி தலைமையாசிரியர் தாரணி தலைமை வகித்தார். மறுகட்டமைப்பு செய்வதில் பெற்றோர் தவறாமல் பங்கேற்பதற்கு வலியுறுத்தப்பட்டது. ஆசிரியர் கண்ணபிரான் அரசின் நலத்திட்டங்கள் குறித்து பேசினார்.
*ஆ.அம்மாபட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் நடந்த கூட்டத்திற்கு, தலைமையாசிரியர் பால்ராஜ் தலைமை வகித்தார். ஊராட்சித்தலைவர் சுகுமார், வார்டு உறுப்பினர் வேலுத்தாய், ஆசிரியர்கள் சங்கரேஸ்வரி, கீதா மற்றும் பெற்றோர் பங்கேற்றனர். மாணவர்களின் மேம்பாடு மற்றும் பள்ளி வளர்ச்சி குறித்து, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
*சின்னவீரம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடந்த கூட்டத்தில், தலைமையாசிரியர் இன்பக்கனி வரவேற்று, பள்ளி மேலாண்மைக்குழுவின் நோக்கம் குறித்து பேசினார். பள்ளி முன்னாள் மாணவர் சங்கத்தலைவர் சோமசுந்தரம் மேலாண்மைக்குழு பணிகள் குறித்து பேசினார்.
*மலையாண்டிகவுண்டனுார் அரசு துவக்கப்பள்ளி முன்னாள் தலைமையாசிரியர் துரைசாமி காணொலி வாயிலாக, பள்ளி மேலாண்மைக்குழு செயல்பாடுகளை விளக்கினார். குழு தலைவர் ஜமுனாராணி, கடந்த இரண்டாண்டுகளில் குழுவின் பங்களிப்பு குறித்து பேசினார்.
உடுமலை வட்டாரத்தில் சிறந்த பள்ளி மேலாண்மைக் குழு உள்ள பள்ளியாக, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. ஆசிரியர் பூங்குழலி குழுவின் செயல்பாடுகளை அறிக்கையாக வாசித்தார்.
புதிய மேலாண்மைக் குழு தேர்விற்கான விதிகள், தகுதிகள் குறித்து ஆசிரியர் கவிதா பேசினார். இரண்டாண்டுகளாக பணிகளை நிறைவாக செய்த பள்ளி மேலாண்மைக்குழுவினருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. ஆசிரியர் மஞ்சுளாமணி நன்றி தெரிவித்தார்
.- நிருபர் குழு -