sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 01, 2026 ,மாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

செயற்கைக்கோள் வடிவமைத்த பள்ளி மாணவர்கள்

/

செயற்கைக்கோள் வடிவமைத்த பள்ளி மாணவர்கள்

செயற்கைக்கோள் வடிவமைத்த பள்ளி மாணவர்கள்

செயற்கைக்கோள் வடிவமைத்த பள்ளி மாணவர்கள்


ADDED : மே 26, 2024 11:07 PM

Google News

ADDED : மே 26, 2024 11:07 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்னுார்;கோவை மாவட்டம் அன்னுாரில் நவபாரத்சி.பி.எஸ்.இ.,பள்ளி செயல்பட்டு வருகிறது. டார்வின் சைன்ஸ் கிளப் சார்பில், கடந்த 24, 25, 26ம் தேதிகளில் மாணவர்களுக்கு, 3 நாட்கள் செயற்கைக்கோள் வடிவமைப்பு பயிற்சி வழங்கும் நிகழ்வு நடந்தது.

இதில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட இஸ்ரோ விஞ்ஞானிகள் இங்கர்சால் செல்லதுரை, சீனிவாசன் ஆகியோர் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தனர். இந்த பயிற்சி வகுப்பில் தமிழகம் முழுவதிலும் இருந்து அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் என சுமார் 200 பேர் பங்கேற்றனர். இந்த பயிற்சியின் சிறப்பு அம்சமாக 2.50 கிலோ எடையில் சிறிய செயற்கைக்கோள் ஒன்று தயாரிக்கப்பட்டது.

இந்த செயற்கைக்கோளை ஹீலியம் கேஸ் பலூன் உதவியுடன் வானில் பறக்க விடப்பட்டது. இந்த செயற்கைக் கோள் உதவியுடன் காற்றின் ஈரப்பதம், வெப்பம் உள்ளிட்ட 9 தகவல்கள் சேகரிக்கப்பட உள்ளன. இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் செயலாளர் நந்தகுமார், அறங்காவலர்கள் செல்வராஜ், வெங்கடாசலம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.-






      Dinamalar
      Follow us