கிழக்கு குறுமைய சதுரங்க போட்டி பள்ளி மாணவர்கள் அசத்தல்
கிழக்கு குறுமைய சதுரங்க போட்டி பள்ளி மாணவர்கள் அசத்தல்
ADDED : ஜூலை 23, 2026 04:51 PM
அ நிறம் | அளவு
பொள்ளாச்சி: பொள்ளாச்சி கிழக்கு குறுமைய அளவிலான சதுரங்க போட்டிகள், ஆரோக்கியமாதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.
இப்போட்டியை நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஒருங்கிணைத்து நடத்தியது. பள்ளி தலைமையாசிரியர் தேன்மொழி, கோவை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் குமரசேன் முன்னிலை வகித்தனர்.
ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவ, மாணவியருக்கான பல்வேறு வயது மற்றும் பிரிவுகளில் சதுரங்க போட்டிகள் நடைபெற்றன. இதில், மாணவர்கள் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்தி அசத்தினர்.
