/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஸ்ரீ ஹரிகோட்டாவுக்கு சென்ற பள்ளி மாணவிகள்
/
ஸ்ரீ ஹரிகோட்டாவுக்கு சென்ற பள்ளி மாணவிகள்
ADDED : ஆக 15, 2024 11:52 PM

அன்னூர் : செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படுவதை பார்வையிட, ஸ்ரீ ஹரிகோட்டாவுக்கு, அன்னுார் பள்ளி மாணவியர் சென்றுள்ளனர்.
பள்ளி மாணவ, மாணவியரிடம், விண்வெளி தொழில்நுட்பம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த, போட்டிகள் நடத்தி வெற்றி பெறுவோரை, செயற்கைக்கோள் ஏவப்படும், ஸ்ரீஹரிகோட்டாவுக்கு அழைத்துச் செல்கின்றனர்.
சின்னியம்பாளையம், ஸ்ரீ சக்தி பொறியியல் கல்லூரியில், கடந்தாண்டு டிசம்பரில் பள்ளி மாணவியருக்கு, வினாடி, வினா போட்டி நடைபெற்றது.
இதில் வெற்றி பெறுவோர், ஆந்திர மாநிலத்தில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் ஏவுதளத்தை பார்வையிட அழைத்துச் செல்லப்படுவர் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதன்படி தேர்வில் வெற்றி பெற்ற, அரசு உதவி பெறும் அன்னுார் கே.ஜி. பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் விசாலி, காவ்யாஞ்சலி, லாவண்யா ஆகிய மூவர் தேர்வு செய்யப்பட்டனர்.
இன்று (16ம் தேதி) ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் இஓஎஸ் 8, ஏவப்படுவதை பார்வையிட, புறப்பட்டு சென்றுள்ளனர்.