/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கனமழையால் வால்பாறையில் பள்ளிகளுக்கு விடுமுறை
/
கனமழையால் வால்பாறையில் பள்ளிகளுக்கு விடுமுறை
ADDED : ஜூன் 26, 2024 09:33 PM
பொள்ளாச்சி : வால்பாறையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு அடடைந்தது. நேற்று, பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
வால்பாறையில் தென்மேற்கு பருவமழையின் தாக்கம் அதிகரித்துள்ளது. அவ்வப்போது, காற்றுடன் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும், பள்ளி மற்றும் கல்லுாரி செல்லும் மாணவ, மாணவியர், பணி நிமித்தமாக பிற பகுதிகளுக்குச் செல்லும் மக்கள், பாதிப்படைந்துள்ளனர்.
இது ஒருபுறமிருக்க, துணிக்கடைகளில், ஸ்வெட்டர், ஜர்க்கின், குல்லா, குடை என, மழை சார்ந்த பொருட்களின் விற்பனையும் அதிகரித்துள்ளது.
மலைத் தொடரில் உள்ள அருவிகள், ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.இதனால், ஆற்றோர பகுதியில் உள்ள குடியிருப்புகளில் வசிப்போர் பாதுகாப்பாக இருக்க, அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று வால்பாறையில் செயல்படும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
அதேநேரம், தேயிலைத் தோட்டப் பகுதிகளில் வசிக்கும் மாணவர்களுக்கு விடுமுறை குறித்து உடனடியாக அறிவிப்பு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. முறையான தகவல் கிடைக்கப் பெறாத மாணவர்கள், காலையில் பள்ளிக்கு வந்து மீண்டும் வீடு திரும்பினர்.