/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வேளாண் பல்கலையில் அறிவியல் தின கொண்டாட்டம்
/
வேளாண் பல்கலையில் அறிவியல் தின கொண்டாட்டம்
ADDED : மார் 01, 2025 05:56 AM
கோவை; கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலையில், தாவர மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிரி தொழில்நுட்ப மையம் சார்பில், தேசிய அறிவியல் தினம் நேற்று கொண்டாடப்பட்டது.
வளர்ந்த இந்தியாவுக்கான அறிவியல் மற்றும் புதுமைக்கான உலகளாவிய தலைமைத்துவத்துக்கு இந்திய இளைஞர்களை மேம்படுத்துதல் என்ற கருப்பொருளுடன், தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்பட்டது.
தாவர மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிரி தொழில்நுட்ப மைய இயக்குநர் செந்தில், தேசிய அறிவியல் தினத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.
1928ம் ஆண்டு பிப்., 28ம் தேதி, இந்திய இயற்பியலாளர் சர்.சி.வி.ராமன், ராமன் விளைவைக் கண்டுபிடித்ததையும், பல்வேறு இந்திய விஞ்ஞானிகளின் அறிவியல் பங்களிப்புகளும் நினைவுகூரப்பட்டன.
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வினாடி வினா, புகைப்படம், வீடியோ எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.
உயிர்த் தகவலியல் துறைத் தலைவர் அருள், தேர்வுக் கட்டுப்பாட்டாளர் பாலசுப்பிரமணி, வேளாண்மை டீன் வெங்கடேச பழனிசாமி, முதுகலை டீன் சுரேஷ்குமார், பையூர் தோட்டக்கலை டீன் அனீஷா ராணி உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.