sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பள்ளி, கல்லுாரிகளில் அறிவியல் தின கண்காட்சி படைப்புகளை காட்சிப்படுத்தி அசத்தல்

/

பள்ளி, கல்லுாரிகளில் அறிவியல் தின கண்காட்சி படைப்புகளை காட்சிப்படுத்தி அசத்தல்

பள்ளி, கல்லுாரிகளில் அறிவியல் தின கண்காட்சி படைப்புகளை காட்சிப்படுத்தி அசத்தல்

பள்ளி, கல்லுாரிகளில் அறிவியல் தின கண்காட்சி படைப்புகளை காட்சிப்படுத்தி அசத்தல்


ADDED : பிப் 28, 2025 11:21 PM

Google News

ADDED : பிப் 28, 2025 11:21 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி,; பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள, பள்ளி, கல்லுாரிகளில், அறிவியல் தினத்தை முன்னிட்டு கண்காட்சி நடந்தது.

பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி, தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் சார்பில், பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் கண்காட்சி நடந்தது. கல்லுாரி முதல்வர் கோவிந்தசாமி தலைமை வகித்தார். துணை முதல்வர் செந்தில்குமார், அறிவியல் தினம் குறித்து பேசினார்.

பரிசளிப்பு விழாவில், கல்வி நிறுவனங்களின் செயலாளர் ராமசாமி,கல்லுாரி மாணவர்களின் திறமைகள், அறிவியல் மாதிரிகளை வெளிப்படுத்தியதற்கு பாராட்டினார். இதில், 80 அணிகள் பதிவு செய்து, பல்வேறு கல்லுாரிகளில் இருந்து, 40 அணிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, சிறந்த பங்களிப்பாளர்களுக்கு ரொக்க பரிசு வழங்கப்பட்டது.

ஆர்.கே.ஆர்., கல்வி நிறுவனங்களின் தலைவர் ராமசாமி, கற்றலின் முக்கியத்துவம், சமூகத்தேவைகள் திறமையாக மாற்றியமைக்கும் ஒருவரின் முழுமையான வளர்ச்சிக்கு அது எவ்வாறு உதவுகிறது என்பதை விளக்கினார். துறை தலைவர் சித்ரா நன்றி கூறினார்.

ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு டீன் ராமகிருஷ்ணன், தொழில் உறவுகள் மற்றும் திறமை மேம்பாடு டீன் கால்வின் சோபிஸ்டல், என்.ஐ.ஏ., பள்ளிகளின் நிர்வாக அலுவலர் சின்னசாமி மற்றும் கல்லுாரி முதல்வர்கள் பங்கேற்றனர்.

* பொள்ளாச்சி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரியில், தேசிய அறிவியல் தினத்தையொட்டி, 'அறிவியலில் சமீபத்திய முன்னேற்றங்கள்' என்ற தலைப்பில், 'போஸ்டர் பிரசன்டேஷன்' போட்டி நடந்தது. மாணவர்கள் தங்களது அறிவியல் நுணுக்கங்களை ஆர்வத்துடன் வெளிப்படுத்தினர்.

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கல்லுாரி தலைவர் ரத்தினம், தாளாளர் ஷிவானிகிருத்திகா, அறங்காவலர் ரவி, முதன்மை நிர்வாக அலுவலர் தனபாலகிருஷ்ணன், துறை தலைவர், பேராசிரியர்கள் பங்கேற்று, பரிசுகளை வழங்கினர்.

* பொள்ளாச்சி பி.ஏ., பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரியில் அறிவியல் மற்றும் மனித பண்பாட்டியல் சங்கம் சார்பில், தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்பட்டது. கல்லுாரி முதல்வர் அப்புக்குட்டி, துணை முதல்வர் லட்சுமி விழாவை துவக்கி வைத்தனர்.

முதலாம் ஆண்டு மாணவர்கள் படைப்பாற்றல், புதுமைகளை வெளிப்படுத்தினர். சிறந்த திட்டங்கள், நடுவர் மன்றத்தால் தேர்வு செய்து சான்றிதழ்கள், ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டன. கல்லுாரி முதல்வர் மணிகண்டன், அறிவியல் மற்றும் மனித பண்பாட்டியல் துறை தலைவர் யுவராஜா, பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

* ஏரிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது. தலைமையாசிரியர் சுகந்தி தலைமை வகித்தார். ஆறாம் வகுப்பு முதல், எட்டாம் வகுப்பு மாணவர்கள், 50 வகையான சோதனைகள், மாதிரிகளை காட்சிப்படுத்தினர்.

அறிவியல் பட்டதாரி ஆசிரியர் கீதா, தேசிய அறிவியல் தினத்தன்று ராமன் விளைவு பற்றி விளக்கினார். முப்பட்டகத்தை வைத்து நிறப்பிரிகை சோதனை செய்து விளக்கினார்.

அமிலமழை, காற்று மாசுபடுதல், காற்றுக்கு எடை உண்டு, பாலைவனத்தில் தாவரங்கள் வளர்த்தல், நீராவி கப்பல், நிறப்பிரிகை, நியூட்டன் வட்டு, பலுான் ராக்கெட், ஊதாமல் பெரிதாகும் பலுான், அமிலமா, காரமா உள்ளிட்ட பல்வேறு படைப்புகள் காட்சிபடுத்தப்பட்டன. ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பார்வையிட்டனர். கண்காட்சியில் படைப்புகளை வைத்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

* தென்சங்கம்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது. தலைமையாசிரியர் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்து தேசிய அறிவியல் தினம் குறித்து பேசினார். பள்ளி மேலாண்மை குழு தலைவர் கவுதமி முன்னிலை வகித்தார்.

அறிவியல் கண்காட்சியை பட்டதாரி ஆசிரியர் மணிமேகலை துவக்கி வைத்தார். வானவில் மன்ற கருத்தாளர் கீர்த்தனா, ராமன் விளைவை செய்முறையாக செய்து காண்பித்து விளக்கினார். மேலும், தேசிய நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. கண்காட்சியில் மாணவர்கள் தங்களது படைப்புகளை காட்சிப்படுத்தி அசத்தினர்.






      Dinamalar
      Follow us