/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சுட்டெரிக்கிறது வெயில்: மண்பாண்டத்தில் 'கூல்'
/
சுட்டெரிக்கிறது வெயில்: மண்பாண்டத்தில் 'கூல்'
ADDED : மே 01, 2024 11:40 PM

கோவை, : கோடையையொட்டி மண்பாண்டங்களுக்கு, மக்கள் மத்தியில் வரவேற்பு பெருகியுள்ளது.
கோடைக்காலம் வந்து விட்டாலே, மண்பாண்டங்களுக்கு தனி மவுசு தான். பல்வேறு விதமான உலோகங்களில், பல வகையான பாத்திரங்கள் செய்யப்பட்டு வந்தாலும், இயற்கையான 'ஆர்கானிக்' மண்பானை வகைகள் மீது, மக்களுக்கு தனி விருப்பம் உண்டு.
தற்போது கோடைக்காலம் என்பதால், மண்பாண்டங்களில் பல வகைகள் விற்பனைக்கு வந்துள்ளன.
அதிலும், குழாயுடன் கூடிய தண்ணீர் கேன், அலுவலகங்களுக்கு தண்ணீர் எடுத்து செல்லும் வகையில் வாட்டர் பாட்டில், ஜார் என மண்பாண்டங்களிலும், பல்வேறு 'அப்டேட்கள்' வந்துவிட்டன.
தண்ணீர் கேன் ரூ. 450 முதலும், வாட்டர் பாட்டில் ரூ. 250க்கும், தண்ணீர் குடிக்க உதவும் ஜார் ரூ. 250 முதலும் விற்பனை செய்யப்படுகின்றன.
எந்த வருடமும் இல்லாத அளவுக்கு, இந்தாண்டு தண்ணீர் ஊற்ற பயன்படும் மண்பாண்டங்கள் மீது, மக்கள் அதிக ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.
கொளுத்தி எடுக்கும் கோடை வெயிலை சமாளிக்கும் வகையில், குளிர்ச்சியான தண்ணீரை இயற்கையாக குடிக்க வேண்டும் என, விரும்பும் பலர் இந்த மண் பாண்டங்களை வாங்கி செல்கின்றனர்.

