/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மோப்பிரிபாளையம் பேரூராட்சியில் செக்டேம் கட்டுமான பணி நிறைவு
/
மோப்பிரிபாளையம் பேரூராட்சியில் செக்டேம் கட்டுமான பணி நிறைவு
மோப்பிரிபாளையம் பேரூராட்சியில் செக்டேம் கட்டுமான பணி நிறைவு
மோப்பிரிபாளையம் பேரூராட்சியில் செக்டேம் கட்டுமான பணி நிறைவு
ADDED : ஏப் 21, 2024 01:20 AM

கருமத்தம்பட்டி;வாழும் கலை அமைப்பு சார்பில், நதி புனரமைப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கருமத்தம்பட்டி அடுத்த மோப்பிரி பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட கவுசிகா நதியில் போல்டர் செக்டேம்கள், உறை கிணறுகள் அமைக்கும் பணிகள் நடந்து வந்தன.
இதற்காக, அமைப்பின் சமுதாய பங்களிப்பு நிதி, 27 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. பேரூராட்சியின் அனுமதியோடு, கடந்த ஒரு மாதமாக பணிகள் நடந்தன. 16 நீர் செறிவூட்டும் உறை கிணறுகள், எட்டு இடங்களில் போல்டர் செக் டேம்கள், எட்டு நீர் சேகரிக்கும் அமைப்புகள் அமைக்கப்பட்டன.
இதுகுறித்து, வாழும் கலை அமைப்பின் நதி புனரமைப்பு திட்ட ஒருங்கிணைப்பாளர் மணிவண்ணன் கூறுகையில், நொய்யல் மற்றும் அதன் துணை ஆறுகளான கவுசிகா, நல்லாற்றில் நதி புனரமைப்பு திட்டத்தின் கீழ், போல்டர் செக் டேம்கள், உறைகிணறுகள் அமைக்கப்பட்டு அப்பகுதி உள்ளாட்சி அமைப்புகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளன. இப்பணிகள் மூலம் நிலத்தடி நீர் மட்டம் உயரும் வாய்ப்பு அதிகரிக்கும், என்றார்.

