/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இரண்டாம் டிவிஷன் கிரிக்கெட் லீக்; எஸ்.என்.ஆர்., வெற்றி
/
இரண்டாம் டிவிஷன் கிரிக்கெட் லீக்; எஸ்.என்.ஆர்., வெற்றி
இரண்டாம் டிவிஷன் கிரிக்கெட் லீக்; எஸ்.என்.ஆர்., வெற்றி
இரண்டாம் டிவிஷன் கிரிக்கெட் லீக்; எஸ்.என்.ஆர்., வெற்றி
ADDED : ஜூன் 26, 2024 10:49 PM
கோவை : மாவட்ட அளவிலான இரண்டாம் டிவிஷன் கிரிக்கெட் லீக் போட்டியில், எஸ்.என்.ஆர்., சன்ஸ் டிரஸ்ட் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி வெற்றி பெற்றது.
கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் யூனிவர்சல் ஹீட் எக்சேஞ்ச் கோப்பைக்கான இரண்டாம் டிவிஷன் கிரிக்கெட் லீக் போட்டி, மலுமிச்சம்பட்டி எஸ்.என்.எம்.வி., கல்லுாரி மைதானத்தில் நடந்தது. இப்போட்டியில், எஸ்.என்.ஆர்., சன்ஸ் டிரஸ்ட் ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் ரெயின்போ 1972 எம்.எம்.சி.சி., அணிகள் மோதின.
முதலில் விளையாடிய ரெயின்போ அணியின் மனோஜ் குமார் (67), யஷ்வந்த் (36) ஆகியோரின் உதவியுடன், 47.3 ஓவர்களில் 241 ரன்கள் சேர்த்தது. எஸ்.என்.ஆர்., அணியின் தேவ் பிரசாத், நான்கு விக்கெட்கள் வீழ்த்தினார்.
போட்டியின் நடுவில் மழை வந்ததால், போட்டி 40 ஓவர்களாக குறைக்கப்பட்டது. பின்னர் பேட்டிங் செய்த எஸ்.என்.ஆர்., அணியினர், 25 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், மீண்டும் மழை குறுக்கிட்டது. இதனால், போட்டி நிறுத்தப்பட்டது. தொடர்ந்து டி.எல்.எஸ்., முறைப்படி எஸ்.என்.ஆர்., அணி, 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. எஸ்.என்.ஆர்., அணிக்கு ராகுல், 42 ரன்கள் சேர்த்தார்.