தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இரண்டாவது டிவிஷன் கிரிக்கெட் போட்டி

இரண்டாவது டிவிஷன் கிரிக்கெட் போட்டி

இரண்டாவது டிவிஷன் கிரிக்கெட் போட்டி


ADDED : ஜூன் 24, 2024 12:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 24, 2024 12:34 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:மாவட்ட அளவில் நடந்த இரண்டாவது டிவிஷன் கிரிக்கெட் லீக் போட்டியில், ஆறுமுகம் லெவன் பேட்ரியாட்ஸ் அணி, அசத்தல் வெற்றி பெற்றது.

கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், 'யுனிவர்சல் ஹீட் எக்சேஞ்சர்ஸ் கோப்பை'க்கான இரண்டாவது டிவிஷன் கிரிக்கெட் லீக் போட்டி, பீளமேட்டில் உள்ள பி.எஸ்.ஜி., ஐ.எம்.எஸ்., சி., மைதானத்தில் நடந்து வருகிறது.

இப்போட்டியில் ரெட் டைமண்ட் அணி மற்றும் ஆறுமுகம் லெவன் பேட்ரியாட்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ரெட் டைமண்ட் அணி, 34.3 ஓவர்களில், 92 ரன்கள் சேர்த்தது.

அடுத்து களம் இறங்கிய ஆறுமுகம் லெவன் பேட்ரியாட்ஸ் அணி, 19.5 ஓவர்களில், 3 விக்கெட் இழப்புக்கு, 93 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த அணியில் விக்னேஷ்வரன், 32 ரன்களை எடுத்திருந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us