ADDED : ஜூன் 21, 2026 08:11 PM
அ நிறம் | அளவு
கோவை: கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம்(சி.டி.சி.ஏ.,) சார்பில் இரண்டாவது டிவிஷன் போட்டி பி.எஸ்.ஜி., உள்ளிட்ட மைதானங்களில் நடக்கிறது. ஆறுமுகம் லெவன் பேட்ரியாட்ஸ் கிரிக்கெட் கிளப் அணியினர் 21.5 ஓவரில் 118 ரன் எடுத்தனர். எதிரணியின் பாலசுப்ரமணி ஐந்து விக்கெட் வீழ்த்தினார்.
ஆர்.கே.எஸ்., கிரிக்கெட் அகாடமி அணி 41.2 ஓவரில் 119 ரன் எடுத்து வெற்றி பெற்றனர். அணியின் ஆகாஷ் 35 ரன் எடுத்தார். எதிரணியின் ஹரிஹரன் நான்கு விக்கெட் வீழ்த்தினார். ஐந்தாவது டிவிஷன் போட்டியில் எஸ்.ஆர்.ஐ.ஐ., அணியினர் 45.2 ஓவரில் 152 ரன் எடுத்தனர். மார்வெல் கிரிக்கெட் கிளப் அணியினர் 33.1 ஓவரில் 153 ரன் எடுத்து வெற்றி பெற்றனர்.
