/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சாண எரிவாயு தொழில்நுட்ப பயிற்சி
/
சாண எரிவாயு தொழில்நுட்ப பயிற்சி
ADDED : பிப் 10, 2025 05:57 AM
கோவை, : கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலை, வேளாண் பொறியியல் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் உள்ள சாண எரிவாயு மற்றும் பயிற்சி மையம் சார்பில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த 20 பயனாளிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சகத்தின் நிதியுதவியின் கீழ் அளிக்கப்பட்ட இப்பயிற்சியில், சாண எரிவாயு உற்பத்தி, அதன் பயன்பாடு, சுத்திகரிக்கப்பட்ட பயோமீத்தேன் தயாரிப்பு, சோலார் மற்றும் ஒளி மின்னழுத்த தொழில்நுட்பங்கள், இதர புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கப்பட்டது. மேலும், சாண எரிவாயு கலனின் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு குறித்த நடைமுறை பிரச்னைகள் குறித்து அறிந்து கொள்ளும் வகையில், களப்பயிற்சியும் அளிக்கப்பட்டது.
பயிற்சியின் நிறைவாக, பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய டீன் ரவிராஜ் , சான்றிதழ்களை வழங்கினார். பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர் ரமேஷ், பேராசிரியர் பழனிசெல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.