/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநில பூப்பந்தாட்ட அணிக்கு தேர்வு
/
மாநில பூப்பந்தாட்ட அணிக்கு தேர்வு
ADDED : ஆக 29, 2024 10:43 PM

கோவை : கோவை மாவட்ட பூப்பந்தாட்ட கழகம் சார்பில் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்கும் சப்-ஜூனியர் வீரர், வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதில், பல்வேறு பள்ளிகளை சேர்ந்த வீரர்கள் பிரிவில், 12 பேர், வீராங்கனைகள் பிரிவில், 12 பேர் பங்கேற்றனர். ஒரு வாரம் பயிற்சி முகாமில் வீரர், வீராங்கனைகள் வெளிப்படுத்திய திறமைகளின் அடிப்படையில் இரு பிரிவிலும் தலா, 10 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நாளையும், நாளை மறுதினமும் தஞ்சாவூரில் நடக்கவுள்ள மாநில அளவிலான அணி தேர்வுக்கு செல்கின்றனர். மாநில தேர்வில் சிறப்பாக செயல்படுபவர்கள், தேசிய அளவிலான போட்டியில் தமிழக அணிக்காக விளையாடுவர். பயிற்சி நிறைவு நாளான நேற்று, கழகத்தின் செயலாளர் மார்ஷல் தேர்வு செய்யப்பட்ட வீரர், வீராங்கனைகளுக்கு விளையாட்டு சீருடைகள் வழங்கினார்.

