/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கே.பி.ஆர்., கல்லுாரியில் விளையாட்டு வீரர்கள் தேர்வு
/
கே.பி.ஆர்., கல்லுாரியில் விளையாட்டு வீரர்கள் தேர்வு
கே.பி.ஆர்., கல்லுாரியில் விளையாட்டு வீரர்கள் தேர்வு
கே.பி.ஆர்., கல்லுாரியில் விளையாட்டு வீரர்கள் தேர்வு
ADDED : மார் 25, 2024 12:45 AM
கோவை:கே.பி.ஆர்., கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லுாரியில், ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கான தேர்வு வரும், ஏப்., 8ம் தேதி துவங்குகிறது.
விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் மாணவ, மாணவிகளுக்கு திறமையின் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும், ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் சலுகை கட்டணம் மற்றும் இலவச கல்வி அளிக்கப்பட்டு வருகிறது. கே.பி.ஆர்., கல்லுாரி சார்பில் ஸ்போர்ட்ஸ் கோட்டா தேர்வு ஏப்., 8,9,10,11 ஆகிய தேதிகளில் நடக்கவுள்ளது.
இதில், கிரிக்கெட், செஸ், கபடி, வாலிபால், கோ கோ; கூடைப்பந்து, இறகுப்பந்து, துப்பாக்கி சுடுதல், தடகளம், பாட பில்டிங், பளு, வலு துாக்குதல், ஹேண்ட்பால், பாக்ஸிங், டேக்வாண்டோ, தற்காப்பு கலைகள், வூசு, ஜூடோ உள்ளிட்ட போட்டிகளில், திறமை வாய்ந்த வீரர்கள் பங்கேற்கலாம்.
முன்பதிவு செய்ய, https://bit.ly/4afFXoW என்ற 'லிங்க்' பயன்படுத்தி, பதிவு செய்து கொள்ளலாம். விபரங்களுக்கு, 97867 67157, 90039 25806 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

