/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பள்ளி மேலாண்மை குழு புதிய உறுப்பினர்கள் தேர்வு
/
பள்ளி மேலாண்மை குழு புதிய உறுப்பினர்கள் தேர்வு
ADDED : ஆக 27, 2024 01:57 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெ.நா.பாளையம்;நரசிம்மநாயக்கன்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமை ஆசிரியர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். இதில், 2024 -26 ஆண்டுகளுக்கான பள்ளி மேலாண்மை குழு தலைவராக மாலதி, செயலாளராக பள்ளி தலைமை ஆசிரியர் ராமச்சந்திரன் மற்றும் முன்னாள் மாணவர்கள், பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட, 24 பேர் தேர்வு செய்யப்பட்டனர். பள்ளி மேலாண்மை குழு புதிய உறுப்பினர்களுக்கு, நிகழ்ச்சியில் பங்கேற்ற பெற்றோர் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.

