/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா
/
செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா
ADDED : செப் 02, 2024 01:45 AM

மேட்டுப்பாளையம்;காரமடையில் உள்ள செல்வ விநாயகர் மற்றும் மலையாள பகவதி அம்மன் கோவிலில், மகா கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
காரமடை ஊராட்சி ஒன்றியம் மருதூர் ஊராட்சிக்கு உட்பட்ட கா. புங்கம்பாளையத்தில், செல்வ விநாயகர் கோவில் மற்றும் மலையாள பகவதி அம்மன் கோவில் உள்ளது.
இக்கோவில்களில் கும்பாபிஷேக திருப்பணிகள் நிறைவு பெறும் தருவாயில் உள்ளன. இந்த இருகோவில்களுக்கும் மகா கும்பாபிஷேக விழா வரும் 6ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான யாகசாலை அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன.
கும்பாபிஷேக விழாவின் ஒரு பகுதியாக இன்று, அதிகாலை மகா கணபதி ஹோமம், ஸ்ரீ மகாலட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், தனபூஜை, கோ பூஜை, மகாதீபாராதனையுடன் கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் தொடங்குகிறது. பின், வெள்ளிக்கிழமை அதிகாலை மங்கல இசையுடன், நான்காம் கால வேள்வி நிறைவு பெற்று, செல்வ விநாயகருக்கு கோபுர கலசத்தில் கும்பாபிஷேகமும், அதனைத் தொடர்ந்து மூலவருக்கு அபிஷேகமும், பின் மலையாள பகவதி அம்மன் கோபுரத்திற்கு கும்பாபிஷேகமும் நடைபெறுகிறது. தொடர்ந்து அன்னதானம் நடைபெறுகிறது. கும்பாபிஷேகத்தையொட்டி ஒவ்வொரு நாளும் கலைநிகழ்ச்சிகள், செண்ட மேளம், வள்ளி, கும்மி கிராமிய கலை நிகழ்ச்சி மற்றும் இன்னிசை நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.
விழாவிற்கான ஏற்பாட்டினை தர்மகர்த்தா திருமப்பகவுடர், ஊர் கவுடர் ஜெயபாலசுப்பிரமணியம், விழா கமிட்டியார், ஊர் பொதுமக்கள் செய்கின்றனர்.