sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

'அக்ரி ஸ்டார்ட் அப்' 15ல் கருத்தரங்கு

/

'அக்ரி ஸ்டார்ட் அப்' 15ல் கருத்தரங்கு

'அக்ரி ஸ்டார்ட் அப்' 15ல் கருத்தரங்கு

'அக்ரி ஸ்டார்ட் அப்' 15ல் கருத்தரங்கு


ADDED : ஆக 08, 2024 10:55 PM

Google News

ADDED : ஆக 08, 2024 10:55 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:'ஈஷா மண் காப்போம்' அமைப்பு சார்பில், வேளாண் தொழில்முனைவு வாய்ப்புகள் குறித்த, 'அக்ரி ஸ்டார்ட் அப்' கருத்தரங்கு, கோவையில் வரும் 15ம் தேதி நடக்கிறது.மண் காப்போம் கள ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார் கூறியதாவது:

விவசாயம் சார்ந்த தொழில்முனைவு வாய்ப்புகள் குறித்து, விவசாயிகள், விவசாயிகள் அல்லாத இளைஞர்கள், பெண்கள் ஆகியோருக்கான அக்ரி ஸ்டார்ட் அப் நிகழ்வு, வரும் 15ம் தேதி சின்னியம்பாளையம், பிருந்தாவன் கலையரங்கில் நடக்கிறது.

காலை 9:00 மணி முதல் நடக்கும் நிகழ்வில், வேளாண்மை சார்ந்த தொழில்களில் உள்ள வாய்ப்புகள், எப்படி தொழில் தொடங்குவது, அரசுத் திட்டங்கள், உதவிகள், நிதி, எப்படி பதிவு செய்வது, மதிப்புக்கூட்டல், பேக்கிங், மார்க்கெட்டிங், பிராண்ட் பெயர் சூட்டுவது, பொருளுக்கு விலை நிர்ணயம் செய்தல் என, ஒரு தொழில் தொடங்கி நடத்துவதற்கான அனைத்து வழிமுறைகள் குறித்தும், துறையில் சாதித்தவர்கள் விளக்குகின்றனர்.மதிப்புக்கூட்டல் மற்றும் பேக்கிங் செய்வதற்காக சிறு இயந்திரங்கள், பேக்கிங் மெட்டீரியல்கள், சீலிங் சாதனங்கள் காட்சிக்கும் விற்பனைக்கும் வைக்கப்படும். பங்கேற்க ரூ.200 கட்டணம். 8300093777 என்ற எண்ணில் முன்பதிவு அவசியம்.

இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

பி.வி.ஆர்., புட்ஸ் நிறுவனர் சுபத்ரா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us