/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சுகாதாரத்துறை வசமான 'டான்டீ' : மருத்துவமனை உயர் அதிகாரிகள் ஆய்வு
/
சுகாதாரத்துறை வசமான 'டான்டீ' : மருத்துவமனை உயர் அதிகாரிகள் ஆய்வு
சுகாதாரத்துறை வசமான 'டான்டீ' : மருத்துவமனை உயர் அதிகாரிகள் ஆய்வு
சுகாதாரத்துறை வசமான 'டான்டீ' : மருத்துவமனை உயர் அதிகாரிகள் ஆய்வு
ADDED : மார் 06, 2025 12:16 AM

வால்பாறை:
சின்கோனா 'டான்டீ' மருத்துவமனை விரைவில் சுகாதாரத்துறை வசம் ஒப்படைக்கவுள்ள நிலையில், அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
வால்பாறை அடுத்துள்ள சின்கோனாவில் செயல்படும் 'டான்டீ' தேயிலை தோட்டம் கடந்த, 2012ம் ஆண்டு வனத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டது. அடர்ந்த வனப்பகுதியின் மத்தியில், தேயிலை தோட்டம் அமைந்துள்ளதாலும், வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுவதாலும், மேற்படி 'டான்டீ' தேயிலை தோட்டம் வனத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில் 'டான்டீ' நிர்வாகம் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்குவதால் இங்குள்ள மருத்துவமனை, சுகாதாரத்துறை வசம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பொது சுகாதாரம் மற்றும் மருத்துவ பணிகள் இயக்குனர் செல்வவிநாயகம் தலைமையிலான அதிகாரிகள், சின்கோனா 'டான்டீ' மருத்துவமனையை ஆய்வு செய்தனர்.
அதிகாரிகள் கூறியதாவது:
சின்கோனா 'டான்டீ' மருத்துவமனை, விரைவில் அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையமாக மாற்றப்படும். அதன்பின் மருத்துவமனையின் பிற கட்டடம் எந்த வகையில் பயன்பாட்டுக்கு கொண்டுவருவது என்பது குறித்து, அரசின் கருத்து கேட்ட பின் முடிவு செய்யப்படும்.
துணை சுகாதார நிலையமாக மாற்றப்பட்டால், டான்டீ தொழிலாளர்களை தவிர பிற எஸ்டேட் தொழிலாளர்களும் பயன் பெறும் வகையில் வசதிகள் செய்யப்படும்.
இவ்வாறு, கூறினர்.
ஆய்வின் போது, சுகாதாரத்துறை துணை இயக்குனர் பால்சாமி, இணை இயக்குனர் செந்தில், வால்பாறை ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் பாபுலட்சுமணன் உட்பட பலர் உடன் இருந்தனர்.