/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சீனியர் பாரா டென்பின் பவுலிங் போட்டி; தேசிய போட்டிக்கு 21 வீரர்கள் தேர்வு

ADDED : மார் 04, 2025 06:26 AM

கோவை; சீனியர் மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா டென்பின் பவுலிங் போட்டியில் வெற்றிபெற்ற, 21 பேர் தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
தமிழ்நாடு பாரா டென்பின் பவுலிங் சங்கம் சார்பில், மாநில அளவிலான இரண்டாவது சீனியர் மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா டென்பின் பவுலிங் போட்டிகள், சரவணம்பட்டியில் உள்ள, புரோசோன் மாலில் நடந்தது.
இதில், 18 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவில், சென்னை, மதுரை, வேலுார், திருப்பூர், கோவையை சேர்ந்த, 21 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். சிறந்த தடகள பயிற்சியாளர் விருது பெற்ற நாராயணன், போட்டிகளை துவக்கிவைத்தார்.
நின்று கொண்டு, வீல் சேர், பார்வை மாற்றுத்திறனாளிகள் என மூன்று பிரிவுகளாக போட்டிகள் நடந்தன. ஒவ்வொருவருக்கும், 120 பந்துகள் வீச வாய்ப்பு வழங்கப்பட்டு, மோதல் புள்ளிகளின் அடிப்படையில், 10 வீரர்கள், 6 வீராங்கனைகள் என, 16 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
இவர்கள் வரும், 24 முதல், 26ம் தேதி வரை நடக்கும், தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் வெற்றி பெறுபவர்கள் வரும் அக்., மாதம், சர்வதேச அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனர்.