/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரோட்டில் தேங்கிய கழிவுநீர்: வாகன ஓட்டுநர்கள் அதிருப்தி
/
ரோட்டில் தேங்கிய கழிவுநீர்: வாகன ஓட்டுநர்கள் அதிருப்தி
ரோட்டில் தேங்கிய கழிவுநீர்: வாகன ஓட்டுநர்கள் அதிருப்தி
ரோட்டில் தேங்கிய கழிவுநீர்: வாகன ஓட்டுநர்கள் அதிருப்தி
ADDED : மே 17, 2024 11:13 PM

பொள்ளாச்சி:பொள்ளாச்சி, மகாலிங்கபுரம் ஐந்து ரோடு சந்திப்பு பகுதி அருகே, கழிவுநீர் ரோட்டில் வெள்ளமாக ஓடியதால் வாகன ஓட்டுநர்கள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.
பொள்ளாச்சி - பல்லடம் ரோட்டில், மகாலிங்கபுரம் அருகே ஐந்து ரோடு சந்திப்பு பகுதி உள்ளது. இவ்வழியாக தினமும், ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில், இந்த ரோட்டில் அமைக்கப்பட்ட பாதாள சாக்கடை திட்ட ஆள் இறங்கும் குழியில் இருந்து கழிவுநீர் வெளியேறி வெள்ளமாக ஓடியது.
இந்த ரோட்டில், கார் உள்ளிட்ட வாகனங்கள் வேகமாக சென்ற போது, இருசக்கர வாகனங்களில் வந்தோர், நடந்து சென்றோரின் மீது கழிவுநீர் தெளித்ததால் அதிருப்தியடைந்தனர்.
பொதுமக்கள் கூறியதாவது:
பல்லடம் ரோட்டில் வருவோர் மழைநீர் தான் குட்டை போல தேங்கி நிற்கிறது என நினைத்தனர். ஆனால், அருகே செல்லும் போது கடும் துர்நாற்றம் வீசியது. மூக்கை பொத்திக்கொண்டு வேகமாக செல்ல வேண்டியுள்ளது. ஒரு சிலர், கழிவுநீரை கடந்து செல்ல தயங்கி வேறு வழியில் சென்றனர்.
இந்த ரோட்டில், ஆள் இறங்கும் குழியில் இருந்து கழிவுநீர் அவ்வப்போது வெளியேறினாலும், சீரமைக்க அதிகாரிகள் அக்கறை காட்டவில்லை. இதனால், ரோட்டில் கழிவுநீர் தேங்குவது தொடர்கதையாகி உள்ளது.
மேலும், கழிவுநீரால், தொற்றுநோய்கள் பரவும் அபாயமும் உள்ளது. அதிகாரிகள் அலட்சியம் காட்டாமல் உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.

