/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தரைமட்ட பாலத்தில் கழிவு நீர் வாகன ஓட்டுநர்கள் திணறல்
/
தரைமட்ட பாலத்தில் கழிவு நீர் வாகன ஓட்டுநர்கள் திணறல்
தரைமட்ட பாலத்தில் கழிவு நீர் வாகன ஓட்டுநர்கள் திணறல்
தரைமட்ட பாலத்தில் கழிவு நீர் வாகன ஓட்டுநர்கள் திணறல்
ADDED : செப் 03, 2024 02:04 AM

பொள்ளாச்சி;சீனிவாசபுரம் ரயில்வே தரைப்பாலத்தில் அவ்வபோது தேங்கும் கழிவுநீரால், இரு சக்கர வாகன ஓட்டுநர்கள் அவதிப்படுகின்றனர்.
பொள்ளாச்சி, மீன்கரை ரோடு மாட்டுச்சந்தை அருகே, ரயில்வே வழித்தடம் குறுக்கிடுவதால், தரைப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் மற்றும் ஆனைமலை செல்லும் வாகனங்களுக்கு முக்கிய வழித்தடமாக உள்ளது.
தினமும், ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்லும் இப்பாலத்தில், அவ்வபோது கழிவுநீர் தேங்குவதால், வாகன ஓட்டுநர்கள் திணறுகின்றனர்.
குறிப்பாக, காலை மற்றும் மாலை நேரங்களில் குழந்தைகளை இரு சக்கர வாகனங்களில் அழைத்துச் செல்லும் பெற்றோர் பெரிதும் பாதிக்கின்றனர். மேலும், மழை பெய்தாலும், தண்ணீர் தேக்கமடைவதால், இலகு ரக வாகனங்கள், அவ்வழியே செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.
தன்னார்வலர்கள் கூறியதாவது:
பாலத்தில் கழிவுநீர் தேங்குவது நிரந்தரமாகி விட்டது. இதனால், வாகனங்களில் செல்வோரும், பாலம் வழியாக நடந்து செல்வோரும் பாதிக்கின்றனர். குடியிருப்பு மற்றும் வணிக நிறுவனங்களில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர், அங்குள்ள ஓடை வழியாகச் சென்று தேங்குகிறது. மழையின் போது, வெள்ளத்துடன் கலந்து ரோட்டில் நிற்கிறது.
இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். கழிவுநீர் மற்றும் மழை வெள்ளம் தேங்காத வகையில் வடிகால் வசதி ஏற்படுத்த துறை ரீதியான அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.