/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாணவிக்கு பாலியல் தொல்லை; வாலிபர் கைது
/
மாணவிக்கு பாலியல் தொல்லை; வாலிபர் கைது
ADDED : மே 04, 2024 11:32 PM
கோவை;கல்லுாரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கோவையை சேர்ந்த, 22 வயது இளம்பெண். தனியார் கல்லுாரியில் இன்ஜினியரிங் படித்து வருகிறார். கடந்த சில வருடங்களுக்கு முன் மாணவி எஸ்.ஐ.எஸ்.எச்., காலனியை சேர்ந்த தினேஷ்குமார், 26, என்பவர் மீது மகளிர் போலீசில் புகார் அளித்திருந்தார். அதன் பேரில் போலீசார், அவர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாணவி வீட்டில் இருந்தார். அப்போது அங்கு வந்த தினேஷ்குமார் மற்றும் அவரது நண்பர் நீலிக்கோனாம்பாளையத்தை சேர்ந்த ராகுல் குமார், 27, ஆகியோர் மாணவியிடம் தகராறில் ஈடுபட்டனர். இதனை பார்த்த மாணவியின் தந்தை அவர்களை கண்டித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த இருவரும் மாணவியை தகாத வார்த்தையால் திட்டி, பாலியல் தொல்லை கொடுத்தனர்.
பின் மாணவியை கீழே தள்ளி, மிரட்டல் விடுத்து அங்கிருந்து சென்றனர்.
காயம் அடைந்த மாணவியை அருகில் இருந்தவர்கள் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
புகாரின் பேரில் சிங்காநல்லுார் போலீசார் வழக்கு பதிந்து, ராகுல் குமாரை கைது செய்து, சிறையில் அடைத்தனர். தப்பி ஓடிய தினேஷ்குமாரை தேடி வருகின்றனர்.