/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நத்தக்காடையூரில் எஸ்.ஜி.எப்.ஐ., போட்டித் தேர்வு கோவை, நீலகிரி மாணவர்கள் அதிருப்தி
/
நத்தக்காடையூரில் எஸ்.ஜி.எப்.ஐ., போட்டித் தேர்வு கோவை, நீலகிரி மாணவர்கள் அதிருப்தி
நத்தக்காடையூரில் எஸ்.ஜி.எப்.ஐ., போட்டித் தேர்வு கோவை, நீலகிரி மாணவர்கள் அதிருப்தி
நத்தக்காடையூரில் எஸ்.ஜி.எப்.ஐ., போட்டித் தேர்வு கோவை, நீலகிரி மாணவர்கள் அதிருப்தி
ADDED : ஆக 29, 2024 08:56 PM
பொள்ளாச்சி:இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமமான எஸ்.ஜி.எப்.ஐ., சார்பில், 2024 - 25 கல்வியாண்டு மண்டல அளவிலான தேர்வு போட்டி, திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அடுத்த நத்தக்காடையூர் பில்டர்ஸ் பொறியியல் கல்லுாரியில் நடக்கிறது.
இப்போட்டியில், கோவை, நீலகிரி, ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ, மாணவியர் பங்கேற்க, பள்ளிகளுக்கு சுற்றறிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாளை 14, 17 மற்றும் 19 வயது மாணவியர் பிரிவு, கூடைப்பந்து, ஹேண்ட்பால், கபடி தேர்வு போட்டி நடத்தப்படுகிறது. செப்., 8ல், மாணவர் பிரிவுக்கான தேர்வு போட்டி நடத்தப்படுகிறது.
ஆனால், மாவட்டத்தின் தலைநகரான திருப்பூரில் கட்டமைப்பு வசதிகள் இருந்தும், திருப்பூர் - ஈரோடு மாவட்ட எல்லையையொட்டிய பகுதியில், தேர்வு போட்டி நடத்துவது, மாணவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
உடற்கல்வி ஆசிரியர்கள் கூறியதாவது:
தேர்வு போட்டிகளில் பங்கேற்க, நீலகிரி மாவட்டத்தின் கடைக்கோடியில் உள்ள பந்தலுார், கூடலுார், கோவை மாவட்டத்தின் வால்பாறை உள்ளிட்ட பல பகுதிகளைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவியர் ஆர்வம் காட்டுவர்.
தேர்வு போட்டி, முக்கிய நகரங்களில் நடத்தப்படாமல், நத்தக்காடையூரில் நடத்தப்படுவதால், இப்பகுதி மாணவர்கள் தொலைதுாரம் பயணிக்க வேண்டியுள்ளது. குறிப்பாக, ஒரு நாள் முன்னதாகவே, மாணவர்கள் அங்கு சென்றடைந்தாலும் பயணக் களைப்பு, போதிய வசதிகள் இல்லாமை போன்ற சிரமங்களுக்கு ஆளாகி தேர்வு போட்டிகளில் ஜொலிக்க முடியாத நிலை ஏற்படும்.
அதற்கு மாறாக, அனைத்து மாணவர்களும் எளிதாக வந்து செல்லும் வகையில் திருப்பூர் அல்லது, கோவை நகரங்களில் போட்டித் தேர்வு நடத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.