/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
/
சக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
ADDED : ஜூன் 18, 2024 12:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை:கோவை, சுண்டபாளையம் ரோடு, குமாரசாமி காலனியில் சக்தி மாரியம்மன், செல்வ கணபதி கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.
கடந்த 16ம் தேதி, மங்கள இசை, திருவிளக்கு வழிபாட்டுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. முளைப்பாரி எடுத்தல், யாகசாலை பூஜைகளைத் தொடர்ந்து, நேற்று காலை, செல்வ கணபதி, சக்தி மாரியம்மனுக்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை, 86 பேர் கொண்ட விழாக்குழுவினர் செய்திருந்தனர்.