/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பண்ணாரி அம்மன் கோவிலில் சிவராத்திரி விழா
/
பண்ணாரி அம்மன் கோவிலில் சிவராத்திரி விழா
ADDED : மார் 01, 2025 05:47 AM

பெ.நா.பாளையம்; துடியலுார் அருகே உருமாண்டம்பாளையம் பண்ணாரி அம்மன் கோவிலில் சிவராத்திரி விழாவையொட்டி, சிறப்பு பூஜைகள், அபிஷேக ஆராதனைகள் நடந்தன.
உருமாண்டம் பாளையம் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் சிவராத்திரி விழாவை ஒட்டி அர்த்தநாரீஸ்வரர் அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன.
மண்ணும், கிழங்குமாவால், 6 அடி உயரத்தில் அர்த்தநாரீஸ்வரர் சிலை உருவாக்கப்பட்டு இருந்தது. இதில், வலதுபுரத்தில் சிவனும், இடது புறத்தில் பார்வதியும் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
விழாவையொட்டி கோவில் வளாகத்தில் உள்ள மாப்பிள்ளை விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து, சிவன் பார்வதிக்கு அபிஷேகம், பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம், திருநீர் அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. பக்தர்கள் அர்த்தநாரீஸ்வரர் மற்றும் வில்வ மரத்தை சுற்றி வந்து, வில்வ இலையை சுவாமி மீது வைத்து வழிபட்டனர். அன்னதானம் நடந்தது.
விழாவில், உருமாண்டாம்பாளையம், நஞ்சேகவுண்டன் புதுார், வெள்ளக் கிணறு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழா ஏற்பாடுகளை கோவில் சிவராத்திரி வழிபாடு குழு மற்றும் பவுர்ணமி குழு உறுப்பினர்கள் தேவேந்திரன், செந்தில், பிரகாஷ் உள்ளிட்டோர் செய்து இருந்தனர்.