/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வடவள்ளி அபார்ட்மென்டில் 'புயலிலே ஒரு தோணி' குறும்படம்
/
வடவள்ளி அபார்ட்மென்டில் 'புயலிலே ஒரு தோணி' குறும்படம்
வடவள்ளி அபார்ட்மென்டில் 'புயலிலே ஒரு தோணி' குறும்படம்
வடவள்ளி அபார்ட்மென்டில் 'புயலிலே ஒரு தோணி' குறும்படம்
ADDED : செப் 02, 2024 01:17 AM

கோவை;'புயலிலே ஒரு தோணி' எனும் முன்னோட்ட குறும்படம்(பைலட் பிலிம்), வடவள்ளியில் உள்ள ஒரு அபார்ட்மென்ட் வளாகத்தில் திரையிடப்பட்டது.
கோவையை சேர்ந்த ஹர்ஷா, தேனியை சேர்ந்த கவுதம் ஆகியோர் இணைந்து 'புயலிலே ஒரு தோணி' எனும் முன்னோட்ட குறும்படத்தை இயக்கியுள்ளனர். கோவையை சேர்ந்த மனோஜ்குமார், ஜான் ஆகியோர் இப்படத்தை தயாரித்துள்ளனர்.
இயக்குனர்கள் ஹர்ஷா, கவுதம் ஆகியோர் கூறியதாவது: கோவையில் இப்படத்தை திரையிட காரணம், நாங்கள் இங்கு பிறந்து வளர்ந்தவர்கள். எங்கள் நண்பர்கள், குடும்பத்தினரின் கருத்துக்களை அறிய, இங்கு திரையிட்டுள்ளோம். குறிப்பாக இங்குள்ளவர்களின் கருத்துதான், ஒட்டுமொத்த மக்களின் கருத்தாக இருக்கும்.
நாங்கள் ஒரு படத்தை இயக்க பேசி வருகிறோம். எங்களின் திறமையை வெளிப்படுத்தவே இந்த குறும்படம். இயக்குனர்களை நம்பி பல படங்கள் வெற்றி பெற்றுள்ளன. அதுபோல் எங்களது படைப்பும் வெற்றி பெறும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தயாரிப்பாளர்கள், மனோஜ்குமார், ஜான் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில், பங்கேற்றனர்.