/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குறுமைய விளையாட்டு மாணவர்கள் அசத்தல்
/
குறுமைய விளையாட்டு மாணவர்கள் அசத்தல்
ADDED : ஆக 14, 2024 12:20 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி;பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், மேற்கு, கிழக்கு, கோட்டூர் மற்றும் மதுக்கரை குறுமைய அளவிலான விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன. கடந்த, 2ம் தேதி துவங்கி உள்விளையாட்டு போட்டிகள் முதற்கட்டமாக நடத்தப்பட்டன.
தொடர்ந்து, மேற்கு குறுமைய விளையாட்டு போட்டிகள், பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் கல்லுாரியில் நேற்று நடைபெற்றன.அதில், கால்பந்து, கூடைப்பந்து, த்ரோ பால், கைப்பந்து, ஹாக்கி, கோ-கோ உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன.
தொடர்ந்து, 14, 17 மற்றும், 19 வயது மாணவர்களுக்கான போட்டிகள் நேற்று நடைபெற்றன. அதில், 30க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த, 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று விளையாடினர்.

