/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குறுகிய கால சேமிப்பு திட்டம் : பெண்களுக்கு தபால்துறை அழைப்பு
/
குறுகிய கால சேமிப்பு திட்டம் : பெண்களுக்கு தபால்துறை அழைப்பு
குறுகிய கால சேமிப்பு திட்டம் : பெண்களுக்கு தபால்துறை அழைப்பு
குறுகிய கால சேமிப்பு திட்டம் : பெண்களுக்கு தபால்துறை அழைப்பு
ADDED : மார் 05, 2025 10:54 PM
கோவை:
மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ் திட்டத்தில், முதலீடு செய்ய அழைப்பு விடப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும் நிதி பாதுகாப்பு வழங்க, நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரத்துறையால், 'மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ்' எனும் திட்டம் தொடங்கப்பட்டது.
இது, பெண்களுக்கான குறுகிய கால சேமிப்பு திட்டம். திட்டத்தின் காலம் இரண்டு ஆண்டுகள் மட்டுமே. திட்டம், வரும் 31ம் தேதி முடிவடைகிறது.
திட்டத்தில் ஆண்டுக்கு, 7.5 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. எந்த ஒரு இந்திய பெண்ணும், கணக்கு துவங்கி முதலீடு செய்யலாம்.
பெண் குழந்தைகள் அல்லது சிறுமிகள் பெயரில், சட்ட பூர்வமான பாதுகாவலர்கள், இயற்கையான பாதுகாவலர்கள் கணக்கை துவங்கலாம்.
திட்டத்தில் கணக்கு துவங்க, ஆதார் கார்டு, பான் கார்டு மற்றும் இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன், அருகில் உள்ள தபால் நிலையங்களை அணுகலாம்.
குறைந்தபட்சம், ஆயிரம் முதல் 2 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம். குறுகிய காலமே உள்ளதால், அனைத்து பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள், அருகில் உள்ள தபால் நிலையங்களை அணுகலாம் என, கோவை அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் சிவசங்கர் அழைப்பு விடுத்துள்ளார்.