/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு மருத்துவமனையில் பணியாளர் பற்றாக்குறை
/
அரசு மருத்துவமனையில் பணியாளர் பற்றாக்குறை
ADDED : ஆக 03, 2024 05:47 AM
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு அரசு ஆரம்ப சுகாதார நிலையம், 2019ம் ஆண்டில் அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. இதில், 58 படுக்கை வசதியுடன் புதிய கட்டடம் திறக்கப்பட்டது. மேலும், இதனுடன் ஆக்சிஜன், எக்ஸ்ரே மற்றும் பிற மருத்துவ உபகரண வசதிகளும் கொண்டுவரப்பட்டது.
மருத்துவமனையில் பணியாளர்கள் பற்றாக்குறையால், நோயாளிகள் பலர் அவதிக்கு உள்ளாகின்றனர். சில நேரங்களில், மருத்துவ உபகரணங்கள் சிலவற்றை எடுத்து செல்ல போதிய பணியாளர்கள் இல்லாததால், பொதுமக்களே அப்பணியை செய்கின்றனர்.
மருந்தாளுனர்கள், செவிலியர்கள் போதிய அளவு இல்லாததால், நோயாளிகளுக்கு மருந்து வழங்கவும், ஊசி போடவும், ரத்த அழுத்தம், சர்க்கரை பரிசோதனைகள் மேற்கொள்வதிலும் தாமதம் ஏற்படுகிறது. மருத்துவமனை வளாகத்தை தூய்மை படுத்துவதில் அவ்வப்போது காலதாமதம் ஏற்படுகிறது. அரசு மருத்துவமனையில் கூடுதலாக, செவிலியர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் நியமிக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என, மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.