
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செய்முறை:
மஞ்சள்துாள், மிளகாய்த்துாள், உப்பு, இஞ்சி, பூண்டு, வறுத்த வெங்காயம், கரம் மசாலா, கால் கப் தயிர் மற்றும் இறால் சேர்த்து நன்கு கலக்கவும்.
அரை மணி நேரம் இதை ஊற வைக்கவும். பிறகு எண்ணெயைச் சூடாக்கி இறால்களைச் சேர்த்து நன்றாக வறுக்கவும்.
பிறகு மீதமுள்ள தயிர், கிரீம், கொத்தமல்லி மற்றும் வறுத்த இறால் சேர்த்து தனியே வைக்கவும். இப்போது பாதி சமைத்த அரிசியை நெய் தடவிய பாத்திரத்தில் சேர்க்கவும். பிறகு இறால்களைச் சேர்க்கவும். பின்னர் மீதமுள்ள அரிசியை அதன்மீது அடுக்கவும்.
இப்போது கடாயை மூடி, தீயை குறைத்து, 20 முதல் 30 நிமிடங்கள் வரை சமைக்கவும். பொன்னிறமாக வறுத்த வெங்காயம், கொத்தமல்லி கொண்டு அலங்கரிக்கவும். அவ்வளவுதான் சூடான இறால் பிரியாணி ரெடி.