ADDED : மார் 15, 2025 12:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போத்தனூர்; கோவை, ஒத்தக்கால்மண்டபத்திலுள்ள பால்ராஜ் சித்தர் பீடத்தில், அவரது 35வது பிறந்த தின குரு பூஜை விழா நேற்று நடநதது.
இதனையொட்டி காலை, சிறப்பு அபிஷேக பூஜையும் மதியம் அன்னதானமும் நடந்தன. கோவை, திருப்பூர், ஈரோடு உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். பால்ராஜ் சித்தர் சுவாமி அறக்கட்டளை மற்றும் பால்ராஜ் சித்தர்பீடம் வழிபாட்டு மன்றத்தினர் இணைந்து ஏற்பாடுகளை செய்திருந்தனர்.