/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேசிய கல்வி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம்
/
தேசிய கல்வி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம்
ADDED : மார் 06, 2025 11:47 PM

சூலுார்; 'சமக்கல்வி எங்கள் உரிமை' என்ற கையெழுத்து இயக்கத்தை, பா.ஜ., துவக்கி உள்ளது. சூலுார் சட்டசபை தொகுதி பா.ஜ.,சார்பில், சூலுார்புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில், கையெழுத்து இயக்கத்தை, மாநில துணை தலைவர் பேராசிரியர் கனகசபாபதி துவக்கி வைத்து பேசுகையில், அவரவர் தாய் மொழியில் படிப்பதை தேசிய கல்வி கொள்கை உறுதி செய்கிறது.
இரண்டாவது மொழியாக ஆங்கிலத்தையும், மூன்றாவதாக விருப்பமான ஒரு மொழியை படிக்கலாம் என்பதே தேசிய கல்வி கொள்கை ஆகும். இதில், இந்தியை எங்கும் திணிக்கவில்லை. தாய் மொழி உள்ளிட்ட பல மொழிகள் படிப்பதால் எதிர்கால சந்ததியினருக்கு ஏராளமான பயன்கள் கிடைக்கும், என்றார்.
முன்னாள் மாவட்ட நிர்வாகிகள் மோகன் மந்திராஜலம், கோபால்சாமி, சத்தியமூர்த்தி, மண்டல தலைவர்கள் விக்னேஷ் பிரபு, ராஜ்குமார், பிரகாஷ், மகேந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்று பொதுமக்களிடம் மும்மொழி கொள்கைக்கு ஆதரவு கேட்டு கையெழுத்து பெற்றனர்.